புதுச்சேரி வரலாறு
புதுச்சேரி நகரம் இந்தியாவின் தென்கிழக்கு கடலோரத்தில் உள்ளது. காலனிய காலத்தில் இதன் பழங்கால வரலாறு பற்றி போதுமான அளவு எழுதப்படாத நிலை இருந்தது, டச்சு, போர்த்துகீசிய, ஆங்கிலேய, பிரஞ்சு போன்ற காலனித்துவ சக்திகள் வருகைக்கு பின்னரான புதுச்சேரியின் வரலாறு குறித்த தெளிவான பதிவுகள் எழுதப்பட்டன. அருகிலுள்ள அரிக்கமேடு, அரியாங்குப்பம், காகையன் தோப்பு, வில்லியனூர், பாகூர் ஆகிய பகுதிகள் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியால் தங்கள் பகுதியுடன் இணைக்கப்பட்டன. விடுதலைக்குப் பின்னர் புதுச்சேரியின் சூழல் மாறியது, காலனித்துவ காலத்திற்கு முந்தைய காலத்தின் வரலாறுகள் எழுதப்பட்டன.
முற்காலம்
[தொகு]1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கடல் செலவு என்னும் நூலில் ஒரு வணிகப் பகுதியாக பொதுகே அல்லது பொதுகா என்ற இடம் குறிப்பிடப்படுகிறது (பாகம். 60). ஜி. டபில்யூ. பி. ஹண்டிங்போர்ட் இந்த இடத்தை அரிக்கமேடு (தற்போது அரியாங்குப்பத்தின் ஒரு பகுதியாக உள்ளது) என அடையாளம் கண்டுள்ளார், இது தற்போதைய புதுச்சேரி நகரத்தில் இருந்து 2 மைல் (3.2 கி.மீ) தொலைவில் உள்ளது. புதுச்சேரி ஒரு முதன்மை இலக்காக ரோம வணிகர்களிடையே இருந்தது. ஹண்டிங்போர்ட் மேலும் குறிப்பிடுகையில் 1937 இல் ரோம மண் பாண்டங்கள் அரிக்கமேட்டில் கிடைத்ததாக குறிப்பிடுகிறார்.
1944 மற்றும் 1947 இக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் இப்பகுதியானது "கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் முதல் பாதியில் ரோமானியப் பொருட்களை இறக்குமதி செய்யப்படும் ஒரு வர்த்தக நிலையமாக இருந்தது" என்பதை காட்டியது என்கிறார்.[1]
4 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், புதுச்சேரி பல்லவ பேரரசின் பகுதியாக இருந்தது. பின்வந்த நூற்றாண்டுகளில் புதுச்சேரி பல தென்னக மரபினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கி.பி 10 ஆம் நூற்றாண்டில். சோழர்கள் கைப்பற்றினர், இவர்களுக்கு மாற்றாக 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் வந்தனர். பிற்காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லீம் ஆட்சியாளர்கள் வந்தனர், இவர்களால் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டது. அதன் பிறகான காலத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு தென்னிந்தியா முழுக்க உட்பட்டது, இவர்கள் அதிகாரமானது 1638 இல் செஞ்சியை பீஜப்பூர் சுல்தான்களால் கைப்பற்றப்பட்ட காலம்வரை நீடித்தது.
ஐரோப்பியர் காலம்
[தொகு]1674 இல் புதுச்சேரியில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி வணிக மையத்தைத் துவக்கியது. இந்த வணிக மையம் பிற்காலத்தில் பிரஞ்சு இந்திய காலனியின் தலைமையகமானது.
டச்சு மற்றும் பிரித்தானிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவுடனான வர்த்தகத்தை விரும்பின. இதனால் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் தீவிரமாக போட்டி நடந்தது. 1693 இல் புதுச்சேரி டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது ஆனால் 1699 இல் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி புதுச்சேரியை பிரான்ஸ் திரும்ப பெற்றது.
பிரஞ்சு-ஆங்கிலப் போர்கள் (1742-1763) மாஹேயில் 1720 களிலும், ஏனாமில் 1731 இலும், காரைக்காலில் 1738 இலும் நடந்தன. 1761 சனவரி 16 அன்று புதுச்சேரியை பிரஞ்சுக்காரர்களிடமிருந்து பிரித்தானியர்கள் கைப்பற்றினர், ஆனால் ஏழு ஆண்டுகள் போரின் முடிவில் பாரிஸ் உடன்படிக்கை (1763) முடிவில் பிரித்தானியர் புதுச்சேரியை மீண்டும் பிரஞ்சு வசம் ஒப்படைத்தது.[2]
புதுச்சேரி பகுதியை பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் மீண்டும் 1793 இல் பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டது, ஆனால் மீண்டும் பிரஞ்சு வசம் 1814 இல் ஒப்படைத்தது. பிரித்தானியர் 1850-ன் பிற்பகுதியில் இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போது, அவர்கள் பிரஞ்சுக்காரர்கள் நாட்டில் தங்கள் குடியிருப்புக்களைத் தங்கள் வசமே வைத்துக்கொள்ள அனுமதித்தனர். இதனால் புதுச்சேரி, மாகி, ஏனாம், காரைக்கால் ஆகிய பிரெஞ்சு இந்தியா பகுதிகள் பிரஞ்சுவசம் 1954 வரை நீடித்தது.
இந்திய ஒன்றியம் 1947 இல் பிரித்தானியரிடம் இருந்து விடுதலையடைந்தது. இதனையடுத்து பிரஞ்சு இந்திய பகுதிகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க போராட்டங்கள் தோன்றின. இதனையடுத்து இங்கு பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா பிரான்சு ஆகிய நாடுகளுக்கிடையே 1948 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சந்திர நாகூர் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97% மக்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதியாக அது இணைக்கப்பட்டது. 1954 அக்டோபர் 18 அன்று கீழூர் என்ற சிற்றூரில் பிரஞ்சு அரசு வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பாண்டிச்சேரி, மாகே, ஏனாம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 178 பேர் வாக்களித்தனர். இதில் 170 பேர் இந்திய ஒன்றியத்துடன் இணைய வாக்களித்தனர். இதனையடுத்து அக்டோபர் 21 அன்று இந்த நான்கு பகுதிகளின் அதிகாரத்தை இந்திய ஒன்றியதிடம் அளிக்கும் ஒப்பந்தத்தில் பிரஞ்சு அரசு கையொப்பமிட்டது. 1954 நவம்பர் 1 அன்று இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து. ஆனால் இதன்பிறகு ஏழத்தாழ எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே இந்திய பிரஞ்சு நாடாளுமன்றங்கள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தன. இதன்பிறகு புதுச்சேரி இந்த நான்கு பகுதிகளும் இந்திய ஒன்றியத்துடன் 1962 ஆகத்து 16 அன்று அதிகாரப்பூரவமாக இணைந்தன. இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. இது 1963 இல் ஒன்றிய பிரதேசமாக ஆக்கப்பட்டது. 204 முதல் நவம்பர் முதல் நாளை புதுச்சேரி அரசு விடுதலை நாளாக கொண்டாடிவருகிறது.[3]
இந்தியாவில் இருந்த பிரெஞ்சு ஆளுநர்களின் பட்டியல்
[தொகு]குறிப்பு: அனைத்து பிரெஞ்சுகாரர்களின் பெயர்களும் பிரெஞ்சு உச்சரிப்பில் கொடுக்க பட்டுள்ளது.
இந்திய சுதந்திரத்திற்கு முன்
[தொகு]- பிரான்சுவா கரான், 1668–1672
- பிரான்சுவா பரான், 1672–1681
- பிரான்சுவா மர்த்தென், 1681 – நவம்பர் 1693
- டச்சு ஆக்கரமிப்பு, செப்டம்பர் 1693 - செப்டம்பர் 1699 <-- ரைசுவைக் ஒப்பந்தம் (1697)
- பிரான்சுவா மர்த்தென், செப்டம்பர் 1699 - டிசம்பர் 31, 1706
- பியெர் டுலிவியே, ஜனவரி 1707-சூலை 1708
- கிய்யோம் ஆந்த்ரே தேபேர், 1708–1712
- பியெர் டுலிவியே, 1712–1717
- கிய்யோம் ஆந்த்ரே தேபேர், 1717–1718
- பியெர் ஆந்த்ரே ப்ரேவொ தெ லா ப்ரேவோஸ்த்தியேர், ஆகத்து 1718 – 11 அக்டோபர் 1721
- பியெர் கிறிஸ்டோஃப் லெ நுஆர் (இடைக்காலப் பதவி), 1721–1723
- ஜோசெப் பூவொய்யே, 1723 - 1726
- பியெர் கிறிஸ்டோஃப் லெ நுஆர், 1726 - 1734
- பியெர் பெனுவா டுமா, 1734 - 1741
- ஜோசெப் பிரான்சுவா டூப்லெக்ஸ், ஜனவரி 14, 1742 - அக்டோபர் 15, 1754
- ஷார்ல் கொதூ, ஆணையர் (இடைக்காலப் பதவி), அக்டோபர் 15, 1754 - 1754
- ஜார்ஜ் டுவல் தெ லீரி, 1754 - 1758
- கௌன்ட் தெ லலீ அல்லது பரோன் தெ தொலெந்தால், 1758 – ஜனவரி 16, 1761
- முதல் பிரித்தானிய ஆக்கரமிப்பு, ஜனவரி 15, 1761 - ஜூன் 25, 1765 <-- பாரிஸ் ஒப்பந்தம் (1763)
- ஜான் லா தெ லூரீஸ்தன், 1765 - 1766
- அன்துவான் பொயேலொ, 1766 - 1767
- ஜான் லா தெ லூரீஸ்தன், 1767 – ஜனவரி 1777
- கிய்யோம் தெ பெல்க்கோம்ப், ஜனவரி 1777 - 1782
- மார்கீ தெ புஸ்ஸி - கஸ்தேல்னு, 1783-1785
- வீகௌன்ட் பிரான்சுவா தெ சுய்யாக், 1785
- டேவிட் ஷர்ப்பான்தியே தெ கொசிஞி, அக்டோபர் 1785 - 1787
- தோமா கான்வே, அக்டோபர் 1787 - 1789
- கமிய் ஷார்ல் லெக்லேர், ''செவாலியே'' தெ ஃபிரேன்,1789 - 1792
- தொமினிக் ப்ரொஸ்பேர் தெ க்ஷெர்மொன் , நவம்பர் 1792 - 1793
- லெஹூ தெ தூஃப்ர்வில், 1793
- இரண்டாம் பிரித்தானிய ஆக்கரமிப்பு, ஆகத்து 23, 1793 – 18 ஜூன் 1802 <-- அமியன் ஒப்பந்தம் (1802)
- ஷார்ல் மேத்யூ இசிதோர் தெ கான், கௌன்ட் தெ கான், ஜூன் 18, 1802 - ஆகத்து 1803
- லூயி பிரான்சுவா பினோ, 1803
- மூன்றாம் பிரித்தானிய ஆக்கரமிப்பு, ஆகத்து 1803 – 26 செப்டம்பர் 1816 <-- பாரிஸ் ஒப்பந்தம் (1814)
- கௌன்ட் டுபுய், செப்டம்பர் 26, 1816 – அக்டோபர் 1825
- ஜோசெப் கொர்தியே (இடைக்காலப் பதவி), அக்டோபர் 1825 – ஜூன் 19, 1826
- கௌன்ட் யூஜின் பனொன், 1826 – ஆகத்து 2, 1828
- ஜோசெப் கொர்தியே (இடைக்காலப் பதவி), ஆகத்து 2, 1828 – ஆகத்து 11, 1829
- ஆகத்து ஜாக் நிக்கோலா பெரொ தெ மேலே, ஏப்ரல் 11, 1829 – மே 3, 1835
- ஹூபர் ஜான் விக்தர், மார்கீ தெ செயின்ட்-சைமன், மே 3, 1835 – ஏப்ரல் 1840
- பால் தெ நூர்கே டு காம்பே, ஏப்ரல் 1840 - 1844
- லூயி புஜோல், 1844–1849
- யெசாந்த் மரீ தெ லலாந் தெ கேலான், 1849–1850
- பிலீப் அஷீல் பேதியே, 1851–1852
- ரேமான் தெ ச-மௌர், ஆகத்து 1852 - ஏப்ரல் 1857
- அலெக்சாந்த்ர் டுரான் டுப்ராய், ஏப்ரல் 1857 - ஜனவரி 1863
- நபோலியன் ஜோசெப் லூயி போன்தாம், ஜனவரி 1863 - ஜூன் 1871
- அன்துவான்-லேஊன்ஸ் மீஷோ, ஜூன் 1871 - நவம்பர் 1871
- பியெர் அரிஸ்தீத் ஃபரொன், நவம்பர் 1871 - 1875
- அடால்ப் ஜோசெப் அன்துவான் திரிய்யா, 1875–1878
- லியுன்ஸ் லோஜியே, பிப்ரவரி 1879 - ஏப்ரல் 1881
- தியோடர் துஹுஏ, 1881 - அக்டோபர் 1884
- ஏதியென் ரீஷோ, அக்டோபர் 1884 - 1886
- எதுவா மெனே, 1886–1888
- ஜார்ஜ் ஜூல் பிக்கே, 1888–1889
- லூயி இப்போலீத் மரீ நுஎ, 1889–1891
- லியுன் ஏமில் க்லெமான்-தோமா, 1891–1896
- லூயி ஜான் ஜிரொ, 1896 - பிப்ரவரி 1898
- பிரான்சுவா பியெர் ரோடியே, பிப்ரவரி 1898 - ஜனவரி 11, 1902
- லூயி பெல்த்தான் (இடைக்காலப் பதவி), ஜனவரி 11, 1902 - 1902
- விக்தோ லூயி மரீ லான்ரெசாக், 1902–1904
- ஃபிலேமா லெமேர், ஆகத்து 1904 - ஏப்ரல் 1905
- ஜோசெப் பஸ்கால் பிரான்சுவா, ஏப்ரல் 1905 - அக்டோபர் 1906
- கபுரியேல் லூயி ஆங்குல்வான், அக்டோபர் 1906 - டிசம்பர் 3, 1907
- அதுரியென் ஜூல் ஜான் புனூர், 1908–1909
- எர்னஸ்ட் ஃபெர்னான் லெவேக், 1909 - சூலை 9, 1910
- ஆல்ஃபிரெ அல்பெர் மர்த்தீனொ, சூலை 9, 1910 - சூலை 1911
- பியெர் லூயி ஆல்ஃபிரெ டுப்ரா, சூலை 1911 - நவம்பர் 1913
- ஆல்ஃபிரெ அல்பெர் மர்த்தீனொ, நவம்பர் 1913 - ஜூன் 29, 1918
- (தெரியவில்லை), ஜூன் 29, 1918 - பிப்ரவரி 21, 1919
- லூயி மார்சியெல் இன்னோசான் ஜெர்பினிஸ், பிப்ரவரி 21, 1919 - பிப்ரவரி 11, 1926
- பியெர் ஜான் ஆன்ரி டிதுலு, 1926 - 1928
- ரொபேர் பால் மரீ தெ கீஸ், 1928-1931
- பிரான்சுவா அதுரியென் ஜூவெனூன், 1931-1934
- லியுன் சொலோமியாக், ஆகத்து 1934 – 1936
- ஒராஸ் வலான்தென் க்ரொசிக்கியா, 1936–1938
- லூயி அலெக்சி ஏதியென் பூன்வென், செப்டம்பர் 26, 1938-1945
- நிக்கோலா எர்னஸ்ட் மரீ மொரீஸ் ஜான்தென், 1945 - 1946
- ஷார்ல் பிரான்சுவா மரீ பரோன், மார்ச் 20, 1946 - ஆகத்து 20, 1947
1946-ல் பிரெஞ்சு இந்தியா, பிரான்சின் வெளிநாட்டு ஆட்சிப்பிரதேசமாக ஆனது.
இந்திய சுதந்திரத்திற்கு பின்
[தொகு]- ஷார்ல் பிரான்சுவா மரீ பரோன், ஆகத்து 20, 1947 - மே 1949
- ஷார்ல் ஷாம்புன், மே 1949 - சூலை 31, 1950
- ஆந்த்ரே மேனார், சூலை 31, 1950 - அக்டோபர் 1954
- ஜார்ஜ் இஸ்கார்கெய், அக்டோபர் 1954 - நவம்பர் 1, 1954
நடைமுறையில் இந்திய ஒன்றியத்தோடு மாற்றப்பட்டது,
- கேவல் சிங், நவம்பர் 1, 1954-1957
- எம்.கே.கிரிபலானி, 1957-1958
- எல்.ஆர்.எஸ். சிங், 1958-1958
- ஏ.எஸ். பாம், 1960
- சரத் குமார் தத்தா, 1961-1961
மேலும் பார்க்க
[தொகு]இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தபின், பணியாற்றிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்.
குறிப்புகள்
[தொகு]- ↑ The Periplus of the Erythraean Sea, transl.
- ↑ Chand, Hukam.
- ↑ போட்டித் தேர்வு: புதுச்சேரியின் விடுதலை வரலாறு, கோபால், இந்து தமிழ், 2019, அக்டோபர் 29